News June 11, 2024
கோவை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலைய அதிகாரிகள் நேற்று வழக்கமாக பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயணி ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ.73,80,000 மதிப்புள்ள 1 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கைப்பற்றினர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பயணி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் விமானம் மூலம் வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News August 17, 2025
கராத்தே கற்றுத்தர கோவை கலெக்டர் அழைப்பு

கோவையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கியஅனுபவமுள்ள நபர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆக.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News August 17, 2025
கோவை மாநகரில் இருந்து 155 ரவுடிகள் வெளியேற உத்தரவு

கோவையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து அவர்களை சென்னை நகர போலீஸ் சட்டப்பிரிவு 51ன் கீழ் நகரை விட்டு 6 மாதத்திற்கு வெளியேற உத்தரவிடப்பட்டு வருகிறது. மேலும், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சாட்சி சொல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். சாட்சிகளை இவர்கள் மிரட்டி வருகின்றனர். அதன்படி கோவை நகரில் இருந்து இதுவரை 155 ரவுடிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 17, 2025
பொதுமக்களே உஷார் கோவைக்கு மஞ்சள் அலர்ட்

கோயம்புத்தூரில் இன்று (ஆகஸ்ட் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையின் அளவு 7 முதல் 11 செ.மீ வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிதமான கனமழைக்கான எச்சரிக்கையாகும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.