News April 15, 2025

கோவை விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!

image

சிறுமுகை ஆலாங்கொம்பு அருகே, கடந்த 10 ஆம் தேதி, ஆட்டோ மீது, 4 பேர் சென்ற பைக் மோதிய விபத்தில், நகுலன், நிஜு, விதுன் உள்ளிட்ட மூவர் பலியாகினர். இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வினித் குமார், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

Similar News

News April 17, 2025

ஊட்டிக்கு செல்வோர் கவனத்திற்கு!

image

உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மே.1ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. இதனிடைய ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வரும் ஏப்.20 ஆம் தேதி முதலே இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

News April 17, 2025

கோவை: பூங்கோல் தாயார் கோயில்

image

கோவையில் எழில்கொஞ்சும் கோவனூரில், பழமையான பூங்கோல் தாயார் குகைக்கோயில் அமைந்துள்ளது. அழகிய மலையிடுக்குகளில் இடையில், அம்மன் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் எல்லாம் சிறிய சிறிய நீருற்றுக்கள் என, இயற்கை நம்மை பிரம்மிக்க வைக்கிறது. குடும்பத்துடன் ஒரு நாள், இயற்கையுடன் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பூங்கோல் தாயார் கோயில் ஒரு வரப்பிரசாதம். SHARE பண்ணுங்க.

News April 17, 2025

கோவை: செங்கல் தலையில் விழுந்து ஒருவர் பலி

image

பீகாரை சேர்ந்தவர் முகமது சலீம்(43). கட்டட கூலி தொழிலாளியான இவர், கோவை, கோவில்பாளையம், வழியாம்பாளையத்தில் அடுக்கு மாடி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது முதல் தளத்திலிருந்து, எதிர்பாராத விதமாக செங்கல் ஒன்று, முகமது சலீம் தலையில் விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

error: Content is protected !!