News February 24, 2026
கோவை: வாக்காளர்கள் கவனத்திற்கு!

கோவை மக்களே வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 25, 2026
கோவை: பட்டா, சிட்டா இனி ஆன்லைனில்!

பட்டா மாற்றம் & நில அளவீடு: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள் பதிவிறக்கம்: பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் (FMB) பெற eservices.tn.gov.in தளத்தைப் பயன்படுத்தலாம்.
வரைபடங்கள்: கிராம வரைபடம் மற்றும் நில அளவை எண் விவரங்களுக்கு tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை அணுகலாம். மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News February 25, 2026
கோவை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News February 25, 2026
கோவை காரமடையில் பயங்கரம்: 5 பேர் கைது

கோவை மாவட்டம் காரமடை அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், அந்தோணி என்ற வாலிபரை அவரது நண்பர்கள் சிவக்குமார், சேகர், பச்சையன், சூர்யா, ஜீவா ஆகிய 5 பேர் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


