News August 21, 2024

கோவை வழியாக கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில்

image

கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று கூறியதாவது, கேரளமாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கொல்கத்தா ஷாலிமார் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து 23.08.2024 முதல் 13.09.2024 வரை வெள்ளிக்கிழமை மாலையில் இந்த ரயில் இயக்கப்படுகின்றது.  இந்த ரயிலானது கொல்லம், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், வழியாக செல்லும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.

Similar News

News December 21, 2025

கோவை அருகே சோகம்: கிணற்றில் விழுந்து குழந்தை பலி

image

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே சின்னம நாயக்கன்பாளையம் பகுதியில் பீகார் மாநில தொழிலாளி மஜும்ன் 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக குழந்தை கிணற்றுக்குள் விழுந்தது. அக்குழந்தையை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

News December 21, 2025

மருதமலைக்கு இப்படி செல்ல தடை

image

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், கோவிலில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தாலும், வரும் 23ம் தேதி அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் டூவீலர்கள், கார்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளிலும் சென்று தரிசனம் செய்யலாம் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

வாக்காளர் சேர்ப்பில் எச்சரிக்கை அவசியம்: வானதி சீனிவாசன்

image

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிவடைந்த நிலையில், போலி வாக்காளர்கள் சேர்ப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, புதிய சேர்க்கைகளில் தேர்தல் ஆணையம் கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

error: Content is protected !!