News September 20, 2024
கோவை: வளர்ப்பு பூனையால் வந்த விபரீதம்

பொள்ளாச்சியில் வீட்டின் வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த கட்டுவிரியன் பாம்பை கடித்துக்கொண்டு வந்து, படுக்கை அறையில் வளர்ப்பு பூனை போட்டது. அந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் சாந்தியை பாம்பு தீண்டியது. இதையடுத்து அலறிய சாந்தியை வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
Similar News
News August 6, 2025
காவல் நிலைய முதல் மாடியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ளது பெரிய கடைவீதி b1 காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் முதல் மாடியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், எப்படி இவர் முதல் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கைரேகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
News August 6, 2025
கோவை: டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் வேலை!

கோவை மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 6, 2025
கோவை: அனைத்து சேவைக்கும் ஒரே APP!

கோவை மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க <