News November 22, 2025

கோவை வரும் CM ஸ்டாலின்

image

வரும் நவ.25, 26 ஆகிய தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்கிறார். நவ.25-ம் தேதி கோவை மாவட்டத்தில் செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்து தொழில்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் . முதலமைச்சர் முன்னிலையில் பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. முதல்வர் வருகைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News

News November 22, 2025

கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முந்தினம் துடியலூர் – சரவணம்பட்டி சாலையில் தனது டூவீலரில் சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 22, 2025

கோவை: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 22, 2025

கோவை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

கோவை மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!