News March 18, 2025
கோவை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மார்ச்.23ஆம் தேதி கோவை வருகிறார். ஆர்.எஸ்.புரத்தில் கோவை மாநகராட்சி நிதியின் கீழ் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக அரசு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செய்து வருகிறது.
Similar News
News March 18, 2025
கோவையில் ஆரஞ்சு நிறத்தில் தவளை

கோவை தடாகம் சாலை, கோவில்மேடு அருகே, கல்யாணி நகரில் உள்ள வயல்வெளியில், நேற்று (மார்ச்.17) ஆரஞ்சு நிறத்தில் தவளைகள் தென்பட்டதால், அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் சிலர், அந்த தவளைகளை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
News March 18, 2025
கோவையில் வேலை வாய்ப்பு முகாம்

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மார்ச்.22ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை மூலம் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 8, 10, 12, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ச்சி பெறுவோருக்கு உடனே வேலை வழங்கப்படும். (Share பண்ணுங்க).
News March 18, 2025
கோவைக்கு மழை இருக்கு

கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று(மார்ச்.17) திடீரென பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அடுத்த இரு நாள்கள்( நாளை, நாளை மறுநாள்) மிதமான மழை இருக்கும் என TNAU காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கோவை மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். Share பண்ணுங்க