News January 20, 2026

கோவை: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 28, 2026

சூலூரில் பெண் தற்கொலை

image

வடமாநிலத்தைச் சேர்ந்த ராதா – முகேஷ் தம்பதி சூலூர் மில்லில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். அப்போது, அங்கு பணிபுரிந்த மனோகரனுக்கும், ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் முகேஷ் அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனோகரனுடன் வசித்து வந்த ராதாவுடன் அவர் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 28, 2026

கோவை: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News January 28, 2026

கோவையில் 3,500 ஆண்டுகளுக்கு முன்.. அதிர்ச்சி தகவல்

image

கோவை, மோலப்பாளையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பழங்கால விலங்குகளின் எலும்புத் துண்டுகள் சில கிடைத்தன. இதில் ஒரு இந்திய காண்டாமிருகத்தின் நான்கு எலும்புத் துண்டுகள், இரண்டு மெட்டாகார்பல்கள் (முன் கை எலும்புகள்) மற்றும் இரண்டு மணிக்கட்டு எலும்புகள் ஆகியவற்றை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த எலும்புகள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!