News March 31, 2025
கோவை: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

கோவை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
Similar News
News April 1, 2025
கோவை: கடன் தொல்லையை நீக்கும் கால சம்ஹார பைரவர்!

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை Share பண்ணுங்க.
News April 1, 2025
கோவை நிலுவை வரியை வசூலிக்க கமிட்டி

கோவை மாநகராட்சியில் சொத்து வரி ₹129.43 கோடி உட்பட மொத்தமாக பல்வேறு வரிகளில் ₹667.77 கோடி இன்னும் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலுவை வரியினங்களை ஆய்வு செய்வதற்கும், வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்து வசூலிப்பதற்கு சிறப்பு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
1 மாதத்தில் 28 பேர் மீது குண்டாஸ்

கோவை சிட்டி போலீஸ் கமிஷனராக சரவணசுந்தா் பொறுப்பேற்ற பிறகு குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாநகரில் ரௌடிகளை ஏ பிளஸ், ஏ, பி என 3 வகைகளாக பிரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 28 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் சரவணசுந்தர் நேற்று தெரிவித்தார்.