News November 6, 2025

கோவை: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, ஈரோடு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

Similar News

News November 6, 2025

மேட்டுப்பாளையத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

image

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13-வயது மாணவிக்கு ஸ்டேஷனரி கடை உரிமையாளர் விஜயகுமார் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விஜயகுமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News November 6, 2025

கோவை: வாக்காளர்களே! முக்கிய எண்கள்

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த எண்ணை அழைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை (வ)- 0422-2551700, கோவை(தெ)- 0422-2302323, கவுண்டம்பாளையம்- 0422-2247831, கிணத்துக்கடவு- 0422-2301114, மேட்டுப்பாளையம்- 0422-2300569, பொள்ளாச்சி- 042-592-24855, சிங்காநல்லூர்- 0422- 2390261, சூலூர்- 0422- 300965, தொண்டாமுத்தூர்- 0422- 2300424, வால்பாறை- 9789555450

News November 6, 2025

அன்னூர் அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி

image

ஈரோட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் நேற்று மாலை கேரளாவில் வாழைக்காய் லோடு இறக்கிவிட்டு மினி லாரியில் புளியம்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அன்னூர்-சத்தி சாலை அருகே சத்தியிலிருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ்சும், மினி லாரியும் திடீரென்று மோதிக்கொண்டன. இதில், லாரி டிரைவர் சதீஸ்குமார் படுகாயம் அடைந்து சம்பவயிடத்திலே இறந்தார். மேலும், பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர்.

error: Content is protected !!