News January 3, 2026

கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

பெங்களூரு ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சில விரைவு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 3 அன்று திருவனந்தபுரம்–பெங்களூரு விரைவு ரயில் பையப்பனஹள்ளி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் எர்ணாகுளம்–பெங்களூரு மற்றும் பெங்களூரு–எர்ணாகுளம் ரயில்களின் இயக்க நேரம் மற்றும் தொடக்க நிலையம் மாற்றப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Similar News

News January 29, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (29.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 29, 2026

கோவை: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

image

கோவை மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ-சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <>Aadhaar App <<>>மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

கோவை: மனைவியின் மண்டையை உடைத்த கணவர்

image

கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி ஹேமலதா. இவர் கடந்த 21-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஒண்டிப்புதூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டில் குருமூர்த்தி இல்லை. பின், மது போதையில் வந்த அவரிடம் ஹேமலதா கேள்வி கேட்க அவரை கட்டையால் மண்டையை உடைத்துள்ளார். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!