News August 11, 2025

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மாற்றம்

image

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பாலப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கவண்டம்பாளையம் வழியாக கோவை நகருக்குள் வரும் அனைத்து இலகு ரக மற்றும் கனரக வாகனங்களும் காந்திபுரம், அவினாசி ரோடு செல்ல, நல்லாம்பாளையம் வழியாக காந்திபுரம் வழியாக செல்லலாம்.

Similar News

News August 11, 2025

கோவை: 8வது படித்திருந்தால் அரசு வேலை!

image

கோவை மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 11, 2025

கோவை: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

image

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஆகஸ்ட்.12) காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் நாளை இந்த கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

கோவை: உங்க ஊர் தாசில்தார் Phone Number

image

▶️கோவை தெற்கு – 0422-2214225. ▶️கோவை வடக்கு – 0422-2247831. ▶️மதுக்கரை – 0422-2622338. ▶️பேரூர் – 0422-2606030. ▶️கிணத்துக்கடவு – 04259-241000. ▶️பொள்ளாச்சி – 04259-226625. ▶️ஆனைமலை – 0425-3296100. ▶️வால்பாறை – 0425-3222305. ▶️சூலூர் – 0422-2681000. ▶️அன்னூர் – 0425-4299908. ▶️மேட்டுப்பாளையம் – 0425-4222153. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!