News January 11, 2025
கோவை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்களாகிய உங்கள் விடுமுறை, பயணத் திட்டங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் அறிவிக்காதீர்கள். அப்படி நாம் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போது, குற்றவாளிகள் அதை திருட்டு மற்றும் வேறு மாதிரியான குற்ற சம்பவம் போன்றவற்றுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர். (இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்)
Similar News
News January 31, 2026
கோவை – ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

பயணிகள் வருகை அதிகரிப்பால் கோவை – ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் எண் 06181: பிப்ரவரி 5, 12, 19 (வியாழன்) அதிகாலை 2.30-க்கு கோவையிலிருந்து புறப்படும். ரயில் எண் 06182: பிப்ரவரி 8, 15, 22 (ஞாயிறு) இரவு 10.05-க்கு ஜெய்ப்பூரிலிருந்து புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் இந்த ரயில்களுக்குப் பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
News January 31, 2026
கோவை: இரவு ரோந்து காவலர் விபரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
கோவை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


