News September 1, 2025
கோவை மாவட்டம் உருவான வரலாறு!

கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூர் என பெயர் பெற்ற கூறப்படுகிறது .ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். அதன் பின் 1866ஆம் ஆண்டில் கோவை நகராட்சியாக தரம் உயர்ந்தது. கொங்கு மண்டலத்தின் இதயமென அழைக்கப்படுவது கோவை என்றால் மிகையாகாது.(SHARE பண்ணுங்க)
Similar News
News September 4, 2025
AI மோசடி குறித்து கோவை காவல்துறை விழிப்புணர்வு!

கோவை மாவட்ட காவல்துறை இன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. அந்த விழிப்புணர்வு புகைப்படத்தில், குழந்தைகள் தனிப்பட்ட தகவல் மற்றும் வாய்ஸ் நோட் பகிர வேண்டாம், AI மோசடி மூலம் போலி அவசர அழைப்புகள் அதிகரிக்கின்றன. எனவே இதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
News September 3, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (03.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 3, 2025
கோவை மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

கோவையில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த அச்சம் இல்லை. மக்கள் பீதி அடையத் தேவையில்லை. சுகாதாரத் துறை அதிகாரிகள் பகுதி வாரியாக பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் தினசரி உள் நோயாளிகள் அனுமதி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.