News October 23, 2024

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 813.40 மிமீ மழை பதிவு

image

கோவை மாநகர் பகுதியான ஏர்போர்ட் பீளமேட்டில் அதிகபட்சமாக 87.60 மி.மீ மழையும், தெற்கு தாலுகா பகுதியில் 70 மி.மீ மழை, பாப்பநாயக்கன்பாளையத்தில் 58.60 மி.மீ மழையும், கோவை புறநகர் மாவட்டம் வால்பாறை 74 மி.மீ மழையும், சோலையார் பகுதியில் 72 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தை குறைந்த பட்சமாக ஆனைமலையில் 3 மி.மீ மழையும் மற்றும் சிறுவாணி அடிவாரத்தில் 5 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Similar News

News February 6, 2026

கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க <>’tnuwwb.tn.gov.in’<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 6, 2026

கோவையில் விபத்து.. பரிதாப பலி!

image

கோவை எட்டிமடை – மதுக்கரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ஜி ஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

News February 6, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் (05.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!