News April 30, 2024
கோவை மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை
கோவையில் நேற்று (ஏப்.29) 103.64 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கோவை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
Similar News
News November 20, 2024
கோவையில் 65 பேர் மீது குண்டர் சட்டம்
கோவை எஸ்பி கார்த்திகேயன் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும். இந்த ஆண்டில் இதுவரை 65 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 20, 2024
துக்க வீட்டில் தீ: பலி 3 ஆக உயர்வு
கோவை: கணபதி பகுதியில் துக்க வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கோவையில் நவ.16ஆம் தேதி துக்க வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ராமலட்சுமி, பானுமதி ஆகியோர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரன்(50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 20, 2024
நேரு கல்விக் குழுமம் ரூ.4 கோடி சொத்து வரி பாக்கி
திருமலையாம்பாளையத்தில் செயல்படும் நேரு கல்விக் குழுமத்தின் கீழ் இரண்டு பொறியியல் கல்லூரி, ஒரு கலை அறிவியல் கல்லூரி, ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் பள்ளி ஆகியவை செயல்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ரூ.4 கோடி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருப்பதால், புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.