News January 2, 2026

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனர்

image

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ. ஜி. பதவிக்கு உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை பெருநகர (தெற்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகப் பணியாற்றி வந்த கண்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணன் 2010-ல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் சென்னை சென்றார்

Similar News

News January 2, 2026

சூலூர் அருகே பரபரப்பு! சாலையில் கிடந்த அம்மன் சிலை

image

சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் அயோத்தியாபுரம் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் அங்கே வைத்து வழிபட முடிவு செய்தனர். ஆனால் அங்கு வந்த வட்டாட்சியர் சிலையை பொதுமக்களிடமிருந்து எடுத்து சென்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தனர். இது பற்றி சூலூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்

News January 2, 2026

கோவை: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

அறிவித்தார் கோவை கலெக்டர்

image

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இலவச முழு மாதிரித்தேர்வுகள் வரும் 3, 10 மற்றும் 17-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!