News January 23, 2026
கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை பதிவு

கோவை மாநகர காவல்துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அந்த புகைப்படத்தில் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் தனிப்பட்ட செய்திகளில் (DM) வரும் அந்நிய இணைப்புகளை உடனடியாக கிளிக் செய்ய வேண்டாம். இவை சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். மேலும் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Similar News
News February 8, 2026
உக்கடத்தில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

கோவை, உக்கடம் வாலாங்குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி ஒன்று அங்கிருந்த கழிப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கோவை மாநகர போலீசார் பகல் நேரங்களில் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
News February 8, 2026
கோவை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கோவை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE
News February 8, 2026
பொள்ளாச்சியில் பயங்கர விபத்து: திமுக பிரமுகர் பலி

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர், ஆனைமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். அவர், பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஜமீன் ஊத்துக்குளி அருகே, எதிரே வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.


