News July 26, 2024
கோவை மாநகராட்சியில் பல்வேறு கூட்டம்

கோவை மாநகராட்சியின் புதிய மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மேயர் மற்றும் நிலை குழு தலைவர் தேர்தலுக்கான கூட்டமும், 6ம் தேதி அன்று காலையில் நடைபெறும் எனவும், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் மற்றும் நியமன குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான கூட்டமும் அன்றைய தினம் பிற்பகல் 2.30க்கு நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையர் கூறினார்.
Similar News
News March 10, 2026
SSLC பொதுத்தேர்வு: 38,390 மாணவர்கள் எழுதுகின்றனர்

கோவையில் மார்ச் 11-ல் தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 509 பள்ளிகளைச் சேர்ந்த 38,390 மாணவர்கள் 159 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க 250 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 949 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
News March 10, 2026
கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று துவங்கியது

ஈரான் -இஸ்ரேல் போர் காரணமாக கோவை ஷார்ஜா மற்றும் கோவை- அபுதாபி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்.
கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3:10 மணிக்கு புறப்பட்ட விமானம் கோவை வந்தடைந்தது. அதேபோல அதிகாலை 3.50 மணிக்கு கோவையில் இருந்து ஒரு விமானம் ஷார்ஜா புறப்பட்டு சென்றது.
News March 10, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


