News November 6, 2025
கோவை மாணவி வன்கொடுமை: 59 இடங்களில் தீவிர ரோந்து!

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கோவை மாநகரில் உள்ள 59 வெறிச்சோடிய இடங்களை போலீசார் அடையாளம் கண்டு கண்காணிப்பு திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, மாலை மற்றும் இரவு நேரங்களில் இவ்விடங்களில் ரோந்து அதிகரிக்க, அதிகாரிகள் டார்ச், சைரன், தடியுடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 6, 2025
கோவையில் பெண்ணிடம் ஆசை காட்டி மோசடி

சரவணம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் இரட்டை லாபம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தனர். பின் அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், தென்காசி சென்று மோசடி செய்த ராஜு (41), முகமது அனீப் (44), அவருடைய மனைவி அன்னு (34) ஆகியோரை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என கோவை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
News November 6, 2025
ராமாயண யாத்திரை சிறப்பு விமான சுற்றுலா

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் கோவையிலிருந்து டிச.10-ம் தேதி அன்று இலங்கை ராமாயண யாத்திரை சிறப்பு விமானச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா கட்டணம் ரூ.68,450ஆகும். மேலும் விவரங்களுக்கு 90031-40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

கோவை மக்களே, வீடுகள் வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!


