News September 27, 2025
கோவை மருதமலையில் நடந்த விபரீதம்

கோவை மாவட்டம் மருதமலை ஆடிவாரத்தில் தனியார் லாட்ஜ்கள் நிறைய உள்ளது. அதில் இன்று ஒரு தனியார் லாட்ஜ் விளம்பரப் பலகை மின் கம்பியில் சரிந்து விழுந்தது. இதனால் இதனை கண்ட பக்தர்கள், அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை தொடர்ந்து மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விளம்பர பலகை அகற்றப்பட்டது.
Similar News
News September 27, 2025
கோவை: 300 ஆபாச வீடியோ: போலீசார் அதிர்ச்சி!

கோவை சூலூர் பாப்பம்பட்டி பிரிவில் காம்பவுண்டில் தனியார் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் சூப்பர்வைசரான சேலத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராஜேஷ் கண்ணா அங்கு பள்ளி மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் நேற்று சூலூர் போலீசார் அவரை கைது செய்தனர். அவரது செல்போனை பரிசோதனை செய்து பார்த்த போது 300க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
News September 27, 2025
கோவை: EXAM இல்லை 10th தகுதி 1,096 காலியிடங்கள்!

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வரை வழங்கப்படும். அக். 14க்குள் <
News September 27, 2025
கோவை குழந்தைகள் சேவை மையத்தில் வேலை!

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓா் அங்கமாக செயல்பட்டு வரும் குழந்தைகள் சேவை மையம் 1098 அலகில் காலியாக உள்ள களப்பணியாளா் பணியிடம், ஒப்பந்த அடிப்படையில் பூா்த்தி செய்யப்படவுள்ளது. விண்ணப்பங்களை அக்.10 ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என்ற முகவரிக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.