News September 14, 2025

கோவை: மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

image

கோவை: கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் , தனது மனைவி பிரியதர்ஷினி மீது நடத்தையில் சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக, நேற்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபிநாத், பிரியதர்ஷினியை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

கோவை: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 14, 2025

கோவை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News September 14, 2025

கோவை அருகே விபத்தில் பெண் பலி!

image

கோவை மேட்டுப்பாளையம் சாலையில், அரசு பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள சாலையில் நேற்று நடந்து சென்ற, ஒரு பெண் மீது அந்த வழியாக வந்த ஒரு வேன் மோதியது. இதில் அந்தப் பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். பின்னர் இது குறித்து போக்குவரத்து மேற்கு புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில், வேன் ஓட்டி வந்த காளீஸ்வரன் (வயது) 22 என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!