News October 15, 2025
கோவை: மனநலம் குன்றிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

கோவையை சேர்ந்த ஒருவருக்கு இரு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி தனியாக வருகிறார். இளையமகள் மன வளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இளைய மகள் மாயமாகியுள்ளார். தேடிய போது அருகில் உள்ள கட்டிடத்தில் ஆடை கலைந்த நிலையில் பாலியல் தொல்லை அளித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட செட்டிபாளையம் போலீசார் கட்டிட தொழிலாளி விஜய் என்பவரை கைது செய்தனர்.
Similar News
News October 15, 2025
கோவை இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு!

கோவை வடவள்ளி தான்சா நகரை சேர்ந்த இளநீர் வியாபாரி வைகுந்தம் கூத்தாண்டவர் கோவில் அருகே கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது, கடை முன்பு ஒருவர் படுத்திருந்துள்ளார். அவரை எழுப்ப முயன்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு இளநீர் வெட்டும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். இப்புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் சுப்ரமணியம் என்பவரை நேற்று கைது செய்தனர்.
News October 15, 2025
கோவை: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

கோவை மக்களே கனரா வங்கியில் வேலை வேண்டுமா? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News October 15, 2025
கோவை: உடல் கருகி முதியவர் பலி

கோவை தாயனூர் நஞ்சப்பன் நகரை சேர்ந்தவர் குருந்தாசலம்(70). இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். இதில் நாகராஜ் என்ற மகன் வீட்டில் குருந்தாச்சலம், பழனியம்மாள் இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு குருந்சாச்சலம் வீட்டின் வெளியில் படுத்தவாறெ பீடி பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, உடலில் தீப்பற்றி கருகி பலியானார். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.