News September 3, 2025

கோவை மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

image

கோவையில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த அச்சம் இல்லை. மக்கள் பீதி அடையத் தேவையில்லை. சுகாதாரத் துறை அதிகாரிகள் பகுதி வாரியாக பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் தினசரி உள் நோயாளிகள் அனுமதி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News September 4, 2025

கோவையில் இன்று முதல் இலவசம்!

image

கோவை மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க

News September 4, 2025

கோவையில் ரூ.38 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்கு

image

கோவை வெள்ளலூரைச் சேர்ந்த விஷ்ணுப்ரியா (29) அளித்த புகாரின் பேரில், போலி நிதி முதலீட்டு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி 2018 முதல் விமலாதேவி என்ற பெண், வார மாத தவணை முறையில் முதலீடு பெற்றதாகவும், மொத்தம் ரூ.63 லட்சத்தில் ரூ.25 லட்சம் மட்டுமே திருப்பி வழங்கி, ரூ.38 லட்சம் வழங்காமல் ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்து தற்போது விசாரிக்கின்றனர்.

News September 4, 2025

AI மோசடி குறித்து கோவை காவல்துறை விழிப்புணர்வு!

image

கோவை மாவட்ட காவல்துறை இன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. அந்த விழிப்புணர்வு புகைப்படத்தில், குழந்தைகள் தனிப்பட்ட தகவல் மற்றும் வாய்ஸ் நோட் பகிர வேண்டாம், AI மோசடி மூலம் போலி அவசர அழைப்புகள் அதிகரிக்கின்றன. எனவே இதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!