News December 14, 2025
கோவை மக்களே: நாளை இங்கு மின்தடை!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.15) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை, பட்டணம்புதூர், பீடம்பள்ளி, பட்டணம், நாயக்கன்பாளையம், வெள்ளலூர், காடுவெட்டிபாளையம், நல்ல கவுண்டம்பாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம், ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், கொள்ளுப்பாளையம், தென்னம்பாளையம், ஊத்துப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News March 2, 2026
கோவை: ரூ.15 லட்சம் வரை கடன் வேனுமா?

கோவை மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News March 2, 2026
நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நாளை (மார்ச்.3) காலை 11:00 மணியளவில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
காரமடை அரங்கநாத சாமி கோயில் பற்றி சிறப்பு

காரமடை அருகே பசு தனியாக சென்று வருவதை கால்நடைகளை மேய்க்க கொண்டு சென்ற ஒருவர் கண்டார். அவர் பசுவை பின் தொடர்ந்து சென்ற போது காரைப்புதரில் பால் சொரிவதைப் பார்த்த அவர் கோபத்தில் புதரை வெட்ட இரத்தம் சொட்டியது. பின் சந்தன காப்பிட்டு பார்த்தபோது பெருமாள் சுயம்புவடிவில் காணப்பட்டதாக கூறுப்படுகிறது. அன்று முதல் பெருமாளுக்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்தப்படுகிறது. இன்றும் வெட்டுக்காயம் காணப்படுகிறது.


