News August 22, 2025

கோவை மக்களே உஷார்… இந்த நாட்களில் மழை பெய்யுமாம்.!

image

கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் 24 வரை வானம் மேகமூட்டமாக இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான தூறல் மழை ஏற்படும். அதிகபட்ச வெப்பம் 31-32°C, குறைந்தபட்சம் 22-23°C. காலை ஈரப்பதம் 80-90%, மாலை 50-60%. காற்று மணிக்கு 10-18 கி.மீ வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

3 பேர் மீது குண்டர் சட்டம்: மத்திய சிறையில் அடைப்பு

image

கோவை நஞ்சுண்டாபுரம் கண்ணனை மிரட்டி பணம், செல்போன் பறித்த ஷாருக்கான் (22), கஞ்சா விற்ற ஈஸ்வரன் சையத் அலி (34), 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேனி சொக்கலிங்கம் (42) ஆகிய 3 பேரையும் போத்தனூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News August 22, 2025

3 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை.!

image

கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற புற்றுநோய் பரிசோதனை முகாமில் 3,20,527 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இதில் 1,950 பேருக்கு புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டு, 47 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. வாய், மார்பகம், கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசோதனை நடைபெற்றது. குணமடையாத வாய்ப்புண், மார்பகத்தில் வலியற்ற கட்டி, போன்றவை தெரிய வந்தன.

News August 22, 2025

கோவையில் செப்டம்பா் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)செப்டம்பா் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடா்பான வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்படும் .

error: Content is protected !!