News August 27, 2025
கோவை மக்களே இன்று இங்கு போங்க.!

ஆசியாவிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலை கோயம்புத்தூரில் புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் உள்ளது. இன்று (ஆக.27) விநாயகர் சதுர்த்தியான இந்நாளில் இவரை நேரில் சென்று தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியமாக கருத்தப்படுகிறது. இந்நாளில் இவருக்கு பிடித்த அரும்கம்புல், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளை படையலிடுவது சிறப்பு. கேட்டதை அருளும் முந்தி விநாயரின் பெருமைகளை மற்றவருக்கும் ஷேர் செய்யுங்க!
Similar News
News August 27, 2025
கோவை: கூட்டுறவு வேலை விண்ணபிப்பது எப்படி?

▶️கோவை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க https://www.drbcbe.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும்▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சூப்பர் வேலை வாய்ப்பு ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
1.20கோடி திருடிய வீட்டு முதலாளயின் ருசிகர வாக்குமூலம்!

கோவை கணுவாயை சேர்ந்த வேல்முருகனின் வடவள்ளி வீட்டில் பிரியா என்பவர் குடியிருந்து வந்தார். இந்நிலையில் பிரியா வீட்டில் வைத்திருந்த ரூ.1.20 கோடி பணம் திருடு போனது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் வீட்டின் உரிமையாளர் வேல்முருகனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். வீட்டை அசுத்தமாக வைத்ததை போட்டோ எடுக்க சென்ற போது பணத்தை பார்த்த ஆசையில் திருடிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
News August 27, 2025
மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி ரயில் டிச.1 வரை நீட்டிப்பு!

சேலம் ரயில்வே கோட்டம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் செப்.8 முதல் டிச.1 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்களன்று இரவு புறப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் காலை திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக செப்.7 முதல் நவ.30 வரை திருநெல்வேலியில் ஞாயிறு இரவு புறப்பட்டு மறுநாள் காலை மேட்டுப்பாளையம் வந்தடையும் என அதில் குறிப்பிட்டுள்ளது.