News December 24, 2025
கோவை மக்களே: இன்று இங்கு கரண்ட் இருக்காது!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.24) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, சின்னியம்பாளையம், கரையாம்பாளையம், மையிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், சிட்ரா ஒரு பகுதி, கோல்ட்வின்ஸ் ஒரு பகுதி, கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை அடிவாரம், நாவவூர் பிரிவு, பொம்மணம்பாளையம், டாடா நகர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 24, 2025
கோயம்புத்தூரில் கத்திக்குத்து

கோவையைச் சேர்ந்த தனசேகர். தனியார் நிறுவன ஊழியர். இவர் பணிபுரியும் அதே நிறுவனத்தில் செந்தில்குமார் (42) என்பவரின் மனைவி வேலை செய்தார். அவர் கணவர் செந்தில்குமார், போதையில் டார்ச்சர் செய்வதாக, தனசேகரிடம் கூறியுள்ளார். அவருக்கு தனசேகர் ஆறுதல் கூறி வந்தநிலையில், இருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி தனசேகரை செந்தில்குமார் கத்தியால் குத்தியுள்ளார். பின் போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.
News December 24, 2025
கோவை: DRIVING தெரிந்தால் அரசு வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே<
News December 24, 2025
மருதமலையில் கருஞ்சிறுத்தை

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் கருஞ்சிறுத்தை ஒன்று அங்குள்ள வீட்டில் புகுந்திருப்பதாக இன்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற வனத்துறையினர் கருஞ்சிறுத்தை குட்டியை நீண்ட நேரமாக போராடி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த கருஞ்சிறுத்தை குட்டியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


