News September 11, 2025
கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வடகோவை ரயில் நிலையத்தில் தண்டவாளம் மாற்றும் பணி நடைபெறுவதால், போத்தனூர் – மேட்டுப்பாளையம் (66616-67) மெமு ரயில்கள் நாளை (செப்.12) ரத்து செய்யப்படுகிறன. திருச்சி பாலக்காடு டவுன் (16843) ரயில் நாளை, போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. இதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
Similar News
News September 11, 2025
சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது ? என்பது குறித்தும், பணத்தை அங்கு போட்டவர் யார்? என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 11, 2025
கோவை: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

கோவை மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News September 11, 2025
கோவையில் 8 மாதங்களில் 79 பேர் உயிரிழப்பு!

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 83 பேர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து இருக்கிறார்கள். அதில் 2 பேர் மட்டுமே தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டில் 8 மாதத்தில் மட்டும் 79 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பை தடுக்க ரயில்வே வாரியம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்டவாளத்தை ஒட்டி தடுப்பு வேலி அமைத்தால் மட்டுமே இது போன்ற உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும். இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது