News October 22, 2025
கோவை மக்களுக்கு எச்சரிக்கை!

கோவையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறு, குளங்கள், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சித்திரைச்சாவடி தடுப்பணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் ஆறு, குளங்கள் மற்றும் தடுப்பணைகளில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News February 17, 2026
தமிழக பட்ஜெட்: கோவைக்கு அறிவித்தார் அமைச்சர்

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும். மேலும், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.
News February 17, 2026
கோவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 17, 2026
அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி

கோவை கொடிசியாவில் அமைந்துள்ள மண்டல அறிவியல் பயிற்சி மையத்தில், அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு, ஐஓடி எனப்படும் மூன்று மாத தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகள் இந்த மாத இறுதி சனிக்கிழமை துவங்க உள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 85239 – 09178 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் மாவட்ட அறிவியல் அலுவலர் நேற்று அறிவித்துள்ளார்.


