News July 6, 2025
கோவை: பெட்டதம்மன் மலைக்கோயில்!

கோவை காரமடை அருகே உள்ள, பெட்டதாபுரத்தில் புகழ்பெற்ற பெட்டதம்மன் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலை காண 2 கி.மீ அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும். சக்திவாய்ந்த பெட்டதம்மனை தரிசித்தால், வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். கவலையை மறந்து குடும்பத்துடன் ஒருநாள் கோயிலில் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இயற்கை எழில் கொஞ்சும் பெட்டதம்மன் கோயில் ஒரு வரப்பிரசாதம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News July 6, 2025
கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜபார். இவரது மனைவி மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், அப்துல் ஜபார் இறந்து 6 நாள்கள் ஆனதை உறுதிசெய்தனர். அவரது மனைவியிடம் விசாரித்த போது, எலி இறந்து வாடை வருவதாக நினைத்தேன் என்றார். கணவன் இறந்தது கூட தெரியாமல், மனைவி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News July 6, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <