News August 25, 2025
கோவை: பாலியல் சீண்டல்.. ஆசிரியர்கள் மீது போக்சோ!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 26, 2025
கோவை: 2 நாட்கள் தான்.. உடனே APPLY பண்ணுங்க!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல்” குறித்த இருநாள் பயிற்சி ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் உலர் காய்கறி, பழஜாம், பழரசம், ஊறுகாய், ஊறுகனி, பழ பார், தக்காளி கெட்சப் தயாரிப்பு முறைகள் கற்பிக்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு: 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. SHARE பண்ணுங்க!
News August 26, 2025
கோவை: இளைஞர் கொலை: ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரை கொலை செய்த வழக்கில், நாகப்பன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகப்பன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாவட்டக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் பவன்குமாருக்கு பரிந்துரை செய்தார். காவல்துறையின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News August 25, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.25) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.