News November 19, 2025

கோவை பயணம் தமிழில் பதிவிட்ட பிரதமர் மோடி

image

கோவைக்கு இன்று பிரதமர் மோடி வருகிறார்.இதனை அடுத்து அவர் தமிழில் தனது எக்ஸ் வலைத்தள பதிவில், “தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதாக இன்று மதியம் கோவை செல்கிறேன். ஏராளமான விவசாயிகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்த துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்புகள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி உதவி விடுவிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பபு” என பதிவிட்டுள்ளார்

Similar News

News November 19, 2025

கோவையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு!

image

கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசையும் கோவைக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

கோவையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

image

பிரதமர் மோடியின் கோவை வருகையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா, பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று (நவ.19)காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 15 டாஸ்மாக் கடைகள், 5 பார்கள், 118 (FL 2) உயர்தர பார்களை மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!