News September 26, 2025

கோவை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<> TN nilam citizen portal <<>>தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News September 26, 2025

கோவை கலெக்டர் ஆப்பீஸ்க்கு 7வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 7வது முறையாக மீண்டும் மிரட்டல் வந்ததால் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ச்சியான மிரட்டலால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் நிலவியது.

News September 26, 2025

அடையாளம் தெரியாத இளைஞர் ரயில் மோதி பலி

image

கோவை ரயில்வே காவல் போலீசார் இன்று கூறியதாவது.. ஆவாரம்பாளையம் முதல், பீளமேடுக்கு இடையே, உள்ள தண்டவாளத்தில் அந்த வழியாக சென்ற, ரயிலில், அடிபட்டு சுமார், 30 வயது மதிக்கத்தக்க, முகவரி தெரியாத ஆண் நபர் இறந்துள்ளார். கோவை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.

News September 26, 2025

கனிமவள கொள்ளையை தடுக்க சிசிடிவி பொருத்தம்!

image

கோவை மாவட்டத்தில் பேரூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, கோவை வடக்கு ஆகிய தாலுகாக்களில் சில ஆண்டுகளாகவே கனிம வள கொள்ளை நடந்து வருகிறது. இதனை தடுக்க கோவை மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதி ரூ.1.80 கோடியில் அதிநவீன ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் தற்போது கிணத்துக்கடவு பகுதியில் 8 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!