News September 5, 2025

கோவை: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

கோவை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0422-2300793 அணுகலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News March 10, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

கோவை கலெக்டர் வெளியிட்ட அறிக்கை

image

கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 44 மாணவர்களும் தற்போது நலமுடன் உள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து மாணவர்களும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பாக உள்ளனர்; மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடல்நிலை சீரானதும் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

கோவை: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

image

கோவை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!