News October 29, 2025
கோவை: பட்டம் படித்தால் ரூ.65,000 சம்பளம்!

கோவை மக்களே, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு மையத்தில் Admin Supervisor, Accounts Supervisor, Marketing Supervisor, Hall Supervisor பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 55,000 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் பிண்ணப்பிக்க <
Similar News
News October 30, 2025
பசுமைக்குடில் கட்டுமானம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பசுமைக்குடில் கட்டுமானம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி (அக்டோபர் 30 முதல் நவம்பர் 28 வரை) நடைபெறும். 12ஆம் வகுப்பு தகுதி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் தொழில்முனைவு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டல் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு swc@tnau.ac.in, 9789982772-ல் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
News October 29, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (29.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
கோவையிலிருந்து புறப்பட்டார் துணை குடியரசு தலைவர்!

துணைக் குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் திருப்பூரில் இன்று நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரை செல்வதற்காக சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்து தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். துணை குடியரசு தலைவர் காரிலேயே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வருகை புரிந்து மதுரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


