News December 28, 2025

கோவை: தொழில் நஷ்டத்தால் பறிபோன உயிர்!

image

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் (22) என்ற இளைஞர், தான் செய்து வந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல மன அழுத்தம் ஏற்பட்டால் தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 அழையுங்கள்

Similar News

News December 28, 2025

FLASH: உக்கடம் பாலத்திற்கு பெயர் வைத்த CM ஸ்டாலின்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.28) கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை 3.8 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம், முன்னாள் ஒன்றிய அமைச்சராக பசுமைப் புரட்சிக்கு அடித்தளமிட்ட சுப்பிரமணியத்தின் பெருமையை போற்றும் வகையில் பெயரிடப்படுவதாக தெரிவித்தார்.

News December 28, 2025

1.10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்

image

கோவை மாவட்டத்தில் அண்மையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது கடந்த ஜனவரியில் வெளியான வாக்காளர் பட்டியலில் 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். அண்மையில் வெளியிடப்பட்ட பட்டியலில் 25,74,608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பலர் தங்கள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யவில்லை. இதனை முறையாக பூர்த்தி செய்ய 1.10 லட்சம் வாக்காளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News December 28, 2025

கோவை: 10th/ ITI முடித்தால் ரயில்வேயில் உடனடி வேலை

image

ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 “குரூப் டி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, மருத்துவ சோதனை. சம்பளம்: ரூ.18,000 முதல் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன., 21 முதல் பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும். (SHARE)

error: Content is protected !!