News November 16, 2024
கோவை: தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளுக்கு தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம். தென்னைமர காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகள் செலுத்தும் பிரீமியத்தில் 50% மாநில அரசு வழங்கி விடும். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம். காப்பீடு நிறுவனத்தை 9843007436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கோவை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
கோவை இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கோவை மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 1, 2026
கோவை மக்களுக்கு செந்தில் பாலாஜி சர்ப்ரைஸ்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கோவையில் அதிமுவினர் தொகுதி வாரியாக பரிசு பொருட்களை விநோயகம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில், வேலுமணியின் செக் வைக்கும் வகையில், செந்தில் பாலாஜி சர்ப்ரைஸ் பரிசுகளை வழங்கவுள்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
News March 1, 2026
100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் சமுதாய வளைகாப்பு விழா சுகுணாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. 100 கர்ப்பிணிகளுக்கு சேலை, வளையல் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் அலுவலர்கள் வழங்கினார். இதில் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


