News September 1, 2025
கோவை: திருமண தடையை நீக்கும் அதிசய தலம்!

கோவை, அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள். SHARE பண்ணுங்க!
Similar News
News September 2, 2025
கோவை: அரசு வேலை உடனே விண்ணப்பியுங்க!

கோவை மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ 1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இங்கே <
News September 2, 2025
கோவையில் இன்று ஸ்டாலின் முகாம்கள்!

கோவை கிழக்கு மண்டலம்- ஏஆர்எஸ் திருமண மண்டபம், காரமடை. நகராட்சி விஆர் மஹால் ஆர் கே நகர் டீச்சர்ஸ் காலனி, வேடப்பட்டி பேரூராட்சி- கலைவாணி திருமண மண்டபம் குரும்பபாளையம் வேடப்பட்டி, அன்னூர் வட்டாரம்-வீரமாத்தி அம்மன் கோவில் மண்டபம் மோலப்பாளையம், கிணத்துக்கடவு: அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரி செட்டிக்காபாளையம், பொள்ளாச்சி வடக்கு: எஸ்கே மஹால் வடக்கிபாளையம் ஆகிய இடங்களில் இன்று ஸ்டாலின் முகாம் நடக்கிறது.
News September 1, 2025
மெட்ராஸ் ஐஐடிக்கு சேர்க்கை கோவை மாணவர்கள் சாதனை.!

அனைவருக்கும் ஐஐடி-மெட்ராஸ்’ திட்டத்தின் கீழ், கோவை அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 8 பேர், ஐஐடி மெட்ராஸின் டேட்டா சயின்ஸ் இளங்கலை பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 560 மாணவர்கள் பங்கேற்ற இத்திட்டத்தில், இறுதியாக தேர்வான 8 மாணவர்களும் ஒட்டுமொத்த தமிழகத்திலும் கோவையில் இருந்து மட்டும் தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.