News April 14, 2025
கோவை: திருட்டை தடுக்க இத பண்ணுங்க!

கோவையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். திருட்டை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் முகவரி மற்றும் வீடு எத்தனை நாட்களுக்குப் பூட்டி இருக்கும் போன்ற தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, 81900-00100 எண்ணிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க!
Similar News
News April 16, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 15, 2025
தீராத நோய்களை தீர்க்கும் கொங்கு நாட்டு கோயில்!

சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தல ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!
News April 15, 2025
மானாம்பள்ளி மலையேற்றம் நாளை முதல் தொடக்கம்

கோயம்புத்தூரில் நாளை முதல் ‘டிரெக் தமிழ்நாடு’ மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ், மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. முதல்கட்டமாக வால்பாறை, மானாம்பள்ளி வழித்தடம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வனத்துறையின் இணையதளமான https://trektamilnadu.com இல் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.