News August 24, 2024
கோவை: திமுக சார்பில் மாபெரும் பேச்சுப்போட்டி

கோவை கேஸ் கம்பெனி தாரஹா மஹாலில் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் என் உயிரிலும் மேலான என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி துவங்கியது. இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கூடலூர் நகர மன்ற தலைவர் அறிவரசு மற்றும் இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News August 18, 2025
கோவை: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 18, 2025
ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க உத்தரவு!

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை நல்ல முறையில் இருப்பு வைக்க வேண்டும். மழை பெய்து வருவதால் ரேஷன் பொருட்கள் பாதிக்கக்கூடாது. பாதுகாப்பாக வைக்க வேண்டும். வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதியில் ரேஷன் கடைகளுக்கு காட்டு யானைகள் வந்து செல்வதாக தெரிகிறது. இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News August 18, 2025
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை வருகை!

கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் நேற்று இரவு விடுத்த அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (திங்கள்) காலை 11 மணியளவில் கோவை வருகிறார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின், அங்கிருந்து அவர் சூலூர் செல்கிறார். அங்குள்ள அண்ணா சீரணி அரங்கத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என அதில் குறிப்பிட்டுள்ளார்.