News January 26, 2026
கோவை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

கோவை மக்களே..உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 31, 2026
கோவை அருகே குவிக்கப்படும் போலீஸ்

நாளை தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை முருகன் கோவிலில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். துணை கமிஷனர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அதேபோல் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் தேரோட்டத்திற்கும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
News January 31, 2026
மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி சிறப்பு ரயில்

மேட்டுப்பாளையம்–திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிக பயணிகள் பயன்படுத்தி வரும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடிக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து, திங்கள்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து ரயில் இயக்கப்படும். பல முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
News January 31, 2026
கோவையில் இலவச வைஃபை:எங்கு தெரியுமா?

கோவை கணபதி மற்றும் ராஜவீதி பகுதிகளில், எம்.பி நிதியிலிருந்து BSNL மூலம் இலவச வைஃபை வசதியை எம்.பி கணபதி ராஜ்குமார் தொடங்கி வைத்தார். தமிழகத்திலேயே முதன்முறையாக கோவையில் இத்திட்டம் அமலாகியுள்ளது. இந்த இணைய வசதியை ஒரே நேரத்தில் 500 பேர் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மொபைல் எண்ணுக்கும் தினமும் 4 மணி நேரம் இலவச அனுமதி வழங்கப்படும். OTP அடிப்படையில் பாதுகாப்பான லாக்-இன் வசதி செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


