News November 4, 2025
கோவை சம்பவம்: திமுக அரசு மீது அன்புமணி காட்டம்

திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையே ஒரு கொடிய சான்று என அன்புமணி விமர்சித்துள்ளார். TN-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டிள்ளார். இத்தகைய குற்றங்கள் அதிகரிப்புக்கு போதை பொருட்களின் கட்டுக்கடங்காத விற்பனையே காரணம் என்றும், அவற்றை திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News November 4, 2025
DMK அதிகாரத்துக்கு பயப்படும் அரசியல் கட்சிகள்: G.K.வாசன்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று G.K.வாசன் தெரிவித்துள்ளார். திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றுள்ளனர் என சாடினார். மேலும், முறையாக தேர்தல் நடத்த கோட்பாடுகளை வழங்கும் தேர்தல் ஆணையத்தை தோல்வி பயத்தால் ஆளும் திமுக எதிர்க்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
News November 4, 2025
FLASH: 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், நவ.9-ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. குடையை ரெடியா வையுங்க.
News November 4, 2025
பிஹாரை அடமானம் வைக்க துடிக்கும் பாஜக: அகிலேஷ்

NDA கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புவதாகவும், பாஜக எப்போதும் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்பட்டதில்லை எனவும் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தேஜஸ்வியின் வேலைவாய்ப்பு, பெண்களுக்கு ₹2,500 நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகளால் NDA கூட்டணி கட்சியினர் பதற்றமடைந்துள்ளனர். இந்த முறை பிஹார் மக்கள் நல்லிணக்கத்தை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.


