News December 17, 2025

கோவை: குறைந்த விலையில் கார், பைக் வாங்க ஆசையா?

image

கோவையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், பைக் என மொத்தம் 73 வாகனங்கள், வரும் 24-ம் தேதி கோவை ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. இதை வரும் 22-ம் தேதி பார்வையிட்டு, ஏலத்தில் பங்கேற்கலாம். பைக்குகளுக்கு ரூ.2000, 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.3,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க!

Similar News

News December 31, 2025

கோவையில் மொத்தமாக மாற்றம்

image

தமிழக காவல்துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மேற்கு மண்டலம் ஐஜியாக இருந்த செந்தில்குமார், பதவி உயர்வு பெற்று டிஜிபி அலுவலக தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளராக இருந்த சரவணசுந்தரம், மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News December 31, 2025

கோவை: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! SUPER NEWS

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (SHARE பண்ணுங்க)

News December 31, 2025

JUST IN: உக்கடத்தில் அடித்து கொலை

image

மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுராஜ் கோவை உக்கடத்தில் தங்கி தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 28-ம் தேதி புல்லுக்காடு பகுதியில் நின்றிருந்த போது ஆட்டோவை ரிவர்ஸ் எடுத்ததில் சுராஜ் மீது மோதிய வாக்குவாதத்தில் ஆட்டோ டிரைவர் பாசித் மற்றும் நண்பர் பிரகாஷ் இருவரும் சேர்ந்து சுராஜை தாக்கியதில் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து 2 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!