News October 2, 2025
கோவை காவல்துறை எச்சரிக்கை!

கோவை எஸ்பி கார்த்திகேயன் விடுத்த செய்திக்குறிப்பில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்ற செயல்கள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க 94981 -81212, whatsapp எண் 7708-100 100 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
பேரூர் கல்யாணி யானை உடல் நலம் குறித்த அப்டேட்!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக உள்ள கல்யாணி யானையை(33) கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இதன் உடல் நலனை வனத்துறையினர் 3 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். கல்யாணி யானை 4.6 டன் எடையுள்ளது. நல்ல உடல் நலத்துடன் உள்ளது. நடைப்பயிற்சி நேரத்தை அதிகரிக்க அதிகாரிகளை வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
News October 2, 2025
கோவையில் 108 ஆம்புலன்ஸ் 8.45 நிமிடங்களில் வந்து சேரும்

108 ஆம்புலன்ஸ் சேவைகள் கோவையில் 62 ஆம்புலன்ஸ்கள், 4 இருசக்கர ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாண்டு துவக்கத்தில், கோவையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்ட போது அவ்வாகனம் வந்து சேரும் நேரம் 10.1 3 நிமிடங்களாக இருந்தது. விபத்து பகுதிகளை அடையாளம் கண்டு ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டதால் தற்போது 8.45 நிமிடத்தில் வந்து சேர்வதாக கோவை மண்டல மேலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
கோவை: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

1.அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2. இதற்கு அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3. ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.
4. இங்கே <