News November 4, 2025
கோவை கல்லூரி மாணவி வழக்கில் அடுத்த அதிர்ச்சி

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் சுட்டுப்பிடித்த 3 பேர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் மூவரும் ஏற்கெனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது கோவை கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
Similar News
News November 4, 2025
கிட்னி திருட்டு வழக்கில் Point-களை விட்ட அரசு: EPS

கிட்னி திருட்டு வழக்கில் திருச்சி தனியார் சிதார் ஹாஸ்பிடலின் லைசன்ஸை அரசு ரத்து செய்திருந்தது. ஆனால், அந்த உத்தரவை இன்று ஐகோர்ட் மதுரைக் கிளை ரத்து செய்தது. இதை கண்டித்துள்ள EPS, அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சிக்காரரின் ஹாஸ்பிடலை தப்பிக்க வைக்க, மக்கள் நலனை ‘Failure மாடல் ஸ்டாலின் அரசு’ புறந்தள்ளியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 4, 2025
கர்ப்பத்திற்கு நான்தான் காரணம்: மாதம்பட்டி சிக்கினார்

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் வசமாக சிக்கியுள்ளார். ஜாய் கிரிசில்டாவை 2-வது திருமணம் செய்ததாக, மகளிர் ஆணையத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான்தான் அப்பா என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, DNA பரிசோதனை தேவையில்லை என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
News November 4, 2025
சாம்பியன்களை சந்திக்கும் PM மோடி!

ODI உலகக்கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை PM மோடி நாளை(நவம்பர் 5) சந்திக்கவுள்ளார். இதற்காக, பிரதமர் அலுவகத்திலிருந்து BCCI-க்கு சிறப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி வீராங்கனைகள் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளனர். முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


