News November 5, 2025
கோவை: கடன் தொல்லை நீங்க! இத பண்ணுங்க

கோவை மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் புனிதமான நாளாகும். இந்நாளில் கோவை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், பாவங்கள் தீரும், செல்வ வளம் சேரும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)
Similar News
News November 5, 2025
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

சபரிமலை சீசனை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சென்னை–கொல்லம் இடையே போத்தனூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 11.55-க்கு எழும்பூர் புறப்பட்டு, மறுநாள் மாலை கொல்லம் சென்றடையும். திரும்பும் சேவை சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து இரவு 7.35-க்கு புறப்படும்.
News November 5, 2025
கோவை மக்களுக்கு முக்கிய எண்கள்

அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ் சேவைக்கான-108, தீயணைப்பு துறைக்கான-101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன. பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு-1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு-181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால்-1094. (இந்த முக்கிய எண்களை SHARE பண்ணுங்க)
News November 5, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TN-TET) இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நவம்பர் 5 முதல் தொடங்குகிறது. இத்தேர்வில் பங்கேற்போர் https://forms.gle/d2MbqVVtgGeKY9ra6 என்ற இணைப்பில் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு 0422-2642388 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


