News August 27, 2024

கோவை எஸ்பி அதிரடி உத்தரவு

image

கல்லுாரி மாணவர்கள் எனக் கூறி வாடகைக்கு வீடு கேட்டு வருவோரிடம், முழு விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் கட்டாயம் பெற வேண்டும். அப்போதுதான், மாணவர்கள் போர்வையில் குற்றப் பின்னணி உள்ளவர்களை அடையாளம் காண முடியும். கல்லுாரி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துதல், குற்ற பின்னணி உள்ளவர்களிடம் தொடர்பு வைத்திருப்பது, தயவு, தாட்சண்யம் இன்றி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை எஸ்பி எச்சரித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

கோவை ஏர்போர்டில் கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

image

கோவை விமான நிலையத்தில் இன்று ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.37.09 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், 10 ட்ரோன்கள், 36 மைக்ரோபோன்களை பறிமுதல் செய்து அப்துல் ரஹீம், சையது சிராஜுதீன், ஜெய்னுலாபுதீன், முகமது சித்திக், முகமது அப்சல் உள்ளிட்ட ஐவரை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.

News August 18, 2025

கோவை: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

image

கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 20.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 18, 2025

ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க உத்தரவு!

image

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை நல்ல முறையில் இருப்பு வைக்க வேண்டும். மழை பெய்து வருவதால் ரேஷன் பொருட்கள் பாதிக்கக்கூடாது. பாதுகாப்பாக வைக்க வேண்டும். வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதியில் ரேஷன் கடைகளுக்கு காட்டு யானைகள் வந்து செல்வதாக தெரிகிறது. இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!