News December 20, 2024
கோவை: எல்ஹெச்பி பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தாம்பரம்-கோவை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில், டிச.20ஆம் தேதி முதலும், கோவை – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில், டிச.21 ஆம் தேதி முதலும், எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடவசதியுடன், பாதுகாப்பு மிக்க, சொகுசு இருக்கைகள் எல்ஹெச்பி பெட்டிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 3, 2026
கோவை: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

கோவை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 3, 2026
கோவை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 3, 2026
கோவை தெற்கு தொகுதியில் இவரா?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையின் மிக முக்கியத் தொகுதியாகக் கருதப்படும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற தொகுதியாகும்.


