News September 26, 2025

கோவை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க

Similar News

News September 26, 2025

கோவை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<> TN nilam citizen portal <<>>தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News September 26, 2025

7 ஆயிரம் சந்தேக நபர்களின் கைரேகைகள் பதிவு!

image

கோவை மாநகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஏ, ஏ+ ரவுடிகளை கட்டுப்படுத்த மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின் படி மாநகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 7000 சந்தேக நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

News September 26, 2025

கோவையில் விபத்து பெண் போலீஸ் உயிரிழப்பு!

image

கோவை சிங்காநல்லூர் அடுத்த காமராஜர் ரோட்டில் உள்ள சரவணா பார்க்கிங் அருகே இன்று காலை 4.45 மணிக்கு அரிசி மூட்டை ஏற்றி வந்த ஒரு ஈச்சர் வாகனம், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பானுமதி (52) மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பானுமதி, உடனடியாக மீட்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!